லப்.....டப்......
லப்.....டப்......
லப்.....டப்......
உலக உருண்டையின்
இறுதித்துடிப்பு!!!
இந்த நிமிடம்......
இந்த யுகமுடிவு.....
இப்போதைக்கில்லை
எனக் களித்தவனே !
என்ன செய்வாய் இனி?
உயிருக்குள்
வேர் விட்ட
உறவுகள்!
எறும்பூர்ந்து
சேமித்த
சொத்துக்கள்!
இரவெல்லாம்
துணை வந்த
நிலா விளக்கு!
உன் மூச்சை
உள்வாங்கி
தன் மூச்சைத் தந்த
பச்சைமரம் !
வைகறைச்சித்திரம்
தீட்டிய
சூரியத்தூரிகை !
வாசிக்காமல்
மிச்சம் வைத்த
நட்சத்திரப் புத்தகம் !
ஓ.....................
பனித்துளி சிலிர்த்த
இந்த
பூமிச்சிறுகதைக்கு
இனி நிரந்தர
முற்றுப்புள்ளி !
மானிடா !
உன்
கடைசிப் பயணத்துக்கு
கடைசி கடைசியாய்
எதைச்சேமித்தாய் ?
1998 may
1 comments:
//இந்த நிமிடம்......
இந்த யுகமுடிவு.....
இப்போதைக்கில்லை
எனக் களித்தவனே ! //
//மானிடா !
உன்
கடைசிப் பயணத்துக்கு
கடைசி கடைசியாய்
எதைச்சேமித்தாய் ? //
சிநதிக்கத் தூண்டும் வரிகள். அருமை.:)
Post a Comment