Showing posts with label போர்க்காலக்கவிதைகள். Show all posts
Showing posts with label போர்க்காலக்கவிதைகள். Show all posts

Sunday, May 24, 2009

புத்தரின் விழிகள்


வன்னிக்காடுகளே…
எரியுங்கள்!!!

நீண்டு நெடித்த
தெருக்களே…
நொடித்துப்போங்கள்!!!

அதோ…
அப்பம் சுட்டே
சுருங்கிப்போன
ஒரு மூதாட்டியின்
நொருங்கிப்போன
சடலம்!!!

துண்டுப்பாண் அணைத்த
பிஞ்சுக்கைகள்
துண்டித்துக்கிடக்கின்றன!!!

புத்தரின் விழிகள்
மூடியே
இருக்கின்றன!!!

நான்
ஓர் இலங்கையள்…
வெட்கிக்கிறேன்…
கையாலாகாத
என் பேனா
தலை குனிகிறது!!!


கொடுமணல் வெளியில்
மழைத்துளி
வாழுமா?

அரசிலை வேரில்
இரத்த ஆறுகளா?

புத்தரின் விழிகள்
மூடியே
இருக்கின்றன!!!


Monday, January 26, 2009

நரைக்காத இதயம்

ஊசி ஊசியாய்
உடல் குறுக்கும்
பனிக்குளிர் இரவு !

இருள் முக்காடு
தளர்த்தி
மெல்ல முகிழ்க்கும்
அதிகாலை !

நொண்டி நொண்டி
வரும்
கடல் காற்று !

அபாபீலின் குருதியாய்
சிவக்கும்
கிழக்கு வானம் !

ஈரம் காயாத மண்ணில்
விழுதிறக்கும்
சுஜூதுகள் !

உதடு வலிக்காமல்
விரியும்
முதல் பிரார்த்தனை !

ஒரு விநாடி
…………..
ஒரே விநாடி

தூங்கப்போன
நிலவு
துடித்தெழுந்தது,


உயிர் வேர்களில்
மின்சாரம்
பாய்ந்தது.


ஹெலியே
எப்படித்துணிந்தாய்…
எப்படித்துணிந்தாய்…
எங்கள்
யாஸீனைக் கொல்ல…


இலை மடியிலிருந்து
அவிழும்
பனித்துளி போல…

காம்புக்கு வலிக்காமல்
கழன்று விழும்
ஒற்றை ரோஜா போல…

நீங்கள் சென்றீர்கள்……..
எங்கள் இதயங்களோடு

‘உயிர்த்தியாகியாய்
மரணிப்பேன்”
வலிக்கும் அவ்வார்த்தை
ஒலிக்கிறது என்னுள்…


சக்கர நாற்காலி
சந்தோஷப்பட்டிருக்கும்
ஒரு ஷஹீதைச்சுமந்த
கனதியில்…


உதடுகளில்
உலாவரும்
அந்த
புதிய புன்னகை…

கனிவும்
காயாத தெளிவும்
கலந்த
அந்தக் கண்களின்
வலிமை…


தளர்ந்த உடல்
தாங்கி நடக்கும்
எஃகு இதயம்…


இதயம் பிழிகிறது !
வெடித்து
வெளிவருகிறது
விம்மலோசை…


புஷ்ஷும் பிளேயரும்
ஏரியல் ஷரோனும்
சந்தோஷித்திருப்பார்கள்…
உங்கள்
உறைந்த விழிகளின்
தீவிரம் காணாததால்


அஹ்மத் யாஸீன்
உங்கள்
சிதறிய சடலத்துக்கு
கூட
இத்தனை சக்தியா?

பனிச்சுனை
நீர்கசியும்
இருதயத்தில்
இத்தனை
உறுதிப்பூக்களா?

ஹமாஸ்-
இங்கு தானே
பூக்கள் புன்னகைத்தன
மரணத்தைக்கண்டு…

விழிகள் அசந்த போது
விழிப்பாய் வந்த
ஹமாஸ்

பிஞ்சு நெஞ்சில்
விதையாய் விழுந்து
விருட்சமாய் விரிந்த
ஹமாஸ்

மரணம்
இங்கு கெளரவிக்கப்படுகிறது,
யாஸீனைத் தழுவியதால்…

அஹ்மத் யாஸீன்
நீங்கள் புதைக்கப்படுகிறீர்கள்…
இன்திபாழா
உயிர்த்தெழுகிறது.

வல்லரசின்
நிம்மதி தொலைத்த
உங்கள்
வெண்கலக்குரல்

மனசு வருடும்
அந்த
விழிகளின் தீர்க்கம்!


இன்னும் நரைக்காத
உங்கள் இதயம்!

யாஸீனே
எங்கிருக்கிறீர்?

மரணம் சிதைக்காத
அந்த
புன்னகையோடு
சுவனத்தோட்டத்தில்
உலவிக்கொண்டா???

இனி
ஓங்கி ஒலிக்கப்போகும்…
ஹமாஸின் அலைவரிசைக்காய்
காத்துக் கொண்டா???

பொறுத்திருங்கள்
நாங்களும் வருகிறோம்.

.................................................................................................................
உயிர்த்தியாகிகள் மரணிப்பதில்லை.மெழுகு கரைகிறதே என்று திரி எரியாமல் அணைவதில்லை.
அஹ்மத் யாஸீன் அவரது மரணத்தால் மனதுகள் வலிக்கலாம்.
ஆனால் தீயின் நாக்குகளில் போராளிகள் பொசுங்கிப்போவதில்லை.
....................................................................
2004 March 24th
copyright@shameela_yoosufali©



Friday, May 30, 2008

சிலுவை




















நிலவில் குந்தியிருந்து
நட்சத்திரங்களில்
முதுகு சாய்த்து...
கவி தைக்கும்
என்தோழர்களே!!!


என்தேசத்தில்
தென்றல்
நின்று விட்டது!


பூக்கள்சொரிந்த
ஓர்கிட் செடிகள்...


பனித்துளிஉறங்கிய
பச்சைப் புல்வெளிகள்...


ஹைகூ பாடிய
ஏரிக்கரை
நாணற்புதர்கள்....


எல்லாவற்றையும்
சிலுவையில்
அறைந்தாகி விட்டது!


காற்றை
சுருக்கிக் கொண்டே
வந்து விழும்
குண்டுகளின் இடைவேளையில்...


முகங்களை
பச்சை ரத்தத்தால்
போர்த்திக் கொண்ட
சடலங்களின் நடுவில்...


உயிர் வேரை
உசுப்பிக் கொண்டே
தாழப்பறக்கும்
இயந்திரப்பறவையின்
இரைச்சலினூடே....


என்கவிதை
உயிர்தெழுகிறது!!!

copyrights@shameela

Monday, March 31, 2008

அகதி

சுட்டு விரல்
பட்டுசிலிர்க்கும்…
வேலியோர
மொட்டுமல்லி!

விட்டு விட்டு
பூத்தூவும்…
மேகப்பஞ்சு!
அலுக்காமல்
என்னோடு ஓடி வரும்…
ஒற்றை நிலா!

வாசலுக்கு

வரும் போதெல்லாம்
தலை சிலுப்பிவரவேற்கும்
முன் வாசல்
வேப்ப மரம்!

என்கவிதை பொறுக்கி
கிறுக்குப் பிடித்த
என்னறை
ஜன்னல் கம்பி!

நான்
காதலோடு வந்தமரும்
மருதமரப் பந்தல்பதித்த
நதிக்கரை!

……………………….
ஒன்றும் ரசிக்கவில்லை
………………………..
எல்லாமே
எனக்கு
அந்நியமாய்….

எனக்கெதிராய் சதிசெய்வதாய்
…..…………………….……
…………………………

என் உயிர்
முளைத்து சடைத்த
என் தேசம்
எனக்கினி
சொந்தமில்லை!!!

1998 ஜுலை 14


copyrights©shameela_yoosuf_ali

Sunday, March 30, 2008

முடிவிலிப்பாதை!


















என்னவனே!
நீயும் நானும்
சேர்ந்து நடந்த
நதிக்கரையோரம்
உன்
ஞாபகப்பூக்கள்
மெளனமாய் உதிர்கின்றன!





உன்
வாசம் சுமந்த
வாடைக்காற்று..
உயிர் கிள்ளுகிறது!






பாதச்சூட்டில்
பனி உதிர்க்கும்...
டிஸம்பர் மாதப்புல்வெளிகளில்
இன்னும்
ஈரச்சுவடுகள்!!!







































துப்பாக்கிச்சன்னம் தின்ற
உன் உடலை
எரித்தபோதே...
என் எதிர்காலமும்
ஏக்ககனவுகளும்
ஒரேயடியாய் கரிந்து போயின!






கசங்கிய இதயத்தில்...
ஒரு மூலையில்
காதல் மட்டும்
பத்திரமாய்...




என் வீட்டு மல்லிகைப்பந்தல்
எப்போதும் போல...
மொட்டுக்களை
பிரசவிக்கின்றது!



 


..............
கிள்ளும் போது தான்
இதயம்
வலிக்கிறது!





































நிலா காயும் முன்னிரவில்...
முறிந்த வேலிக்கம்புகளூடே
உன் முகம்
பிரகாசமாய்....




எங்கோ தலைகோதும்
தென்றல் காற்றில்..
தென்னங்கீற்றின்
சலசலப்பில்...
உன்
முரட்டுக்குரல்
சங்கீதமாய்...






தூக்கத்தின்
ஆழ்ந்த கர்ப்பத்தில்
உன் கருகிய சடலம்..
திடுக்கிடும் கனவாய்!!
விக்கித்துப்போகிறது
விம்மும் மனசு!!!




என்னவனே!
என் கனவுகளை
காயப்படுத்தாதே!!!




துணை இழந்த
அன்றிலாய்
நானின்னும்
வாழ வேண்டியிருக்கிறது!




யுத்தம் தின்ற
தேசத்தின் எச்சங்களில்...
உன் கனவுகளின்
மிச்சம் தேடி...
களைத்துப்போனேன்!!!




காதலா!!!
என்னையும்
உன்னையும்
ஏங்கிய இலட்சியத்தையும்
எரித்துப்பொசுக்கிய
போர்த்தீக்கு
இன்னுமா தாகம்???




என்றைக்குமாய்
நீ
எரிந்தபோது...
தொடும் தூரத்தில்
என்
இதயமும் எரிந்தது!!!


இது
முடிவிலிப்பாதை!!!


கவிதை முதலிடம்
மாணவ சாகித்திய விழா 2001
உயர்கல்வி மட்டம்
பேராதனைப்பல்கலைக்கழகம்.

copyrights©shameela_yoosuf_ali






Showing posts with label போர்க்காலக்கவிதைகள். Show all posts
Showing posts with label போர்க்காலக்கவிதைகள். Show all posts

Sunday, May 24, 2009

புத்தரின் விழிகள்


வன்னிக்காடுகளே…
எரியுங்கள்!!!

நீண்டு நெடித்த
தெருக்களே…
நொடித்துப்போங்கள்!!!

அதோ…
அப்பம் சுட்டே
சுருங்கிப்போன
ஒரு மூதாட்டியின்
நொருங்கிப்போன
சடலம்!!!

துண்டுப்பாண் அணைத்த
பிஞ்சுக்கைகள்
துண்டித்துக்கிடக்கின்றன!!!

புத்தரின் விழிகள்
மூடியே
இருக்கின்றன!!!

நான்
ஓர் இலங்கையள்…
வெட்கிக்கிறேன்…
கையாலாகாத
என் பேனா
தலை குனிகிறது!!!


கொடுமணல் வெளியில்
மழைத்துளி
வாழுமா?

அரசிலை வேரில்
இரத்த ஆறுகளா?

புத்தரின் விழிகள்
மூடியே
இருக்கின்றன!!!


Monday, January 26, 2009

நரைக்காத இதயம்

ஊசி ஊசியாய்
உடல் குறுக்கும்
பனிக்குளிர் இரவு !

இருள் முக்காடு
தளர்த்தி
மெல்ல முகிழ்க்கும்
அதிகாலை !

நொண்டி நொண்டி
வரும்
கடல் காற்று !

அபாபீலின் குருதியாய்
சிவக்கும்
கிழக்கு வானம் !

ஈரம் காயாத மண்ணில்
விழுதிறக்கும்
சுஜூதுகள் !

உதடு வலிக்காமல்
விரியும்
முதல் பிரார்த்தனை !

ஒரு விநாடி
…………..
ஒரே விநாடி

தூங்கப்போன
நிலவு
துடித்தெழுந்தது,


உயிர் வேர்களில்
மின்சாரம்
பாய்ந்தது.


ஹெலியே
எப்படித்துணிந்தாய்…
எப்படித்துணிந்தாய்…
எங்கள்
யாஸீனைக் கொல்ல…


இலை மடியிலிருந்து
அவிழும்
பனித்துளி போல…

காம்புக்கு வலிக்காமல்
கழன்று விழும்
ஒற்றை ரோஜா போல…

நீங்கள் சென்றீர்கள்……..
எங்கள் இதயங்களோடு

‘உயிர்த்தியாகியாய்
மரணிப்பேன்”
வலிக்கும் அவ்வார்த்தை
ஒலிக்கிறது என்னுள்…


சக்கர நாற்காலி
சந்தோஷப்பட்டிருக்கும்
ஒரு ஷஹீதைச்சுமந்த
கனதியில்…


உதடுகளில்
உலாவரும்
அந்த
புதிய புன்னகை…

கனிவும்
காயாத தெளிவும்
கலந்த
அந்தக் கண்களின்
வலிமை…


தளர்ந்த உடல்
தாங்கி நடக்கும்
எஃகு இதயம்…


இதயம் பிழிகிறது !
வெடித்து
வெளிவருகிறது
விம்மலோசை…


புஷ்ஷும் பிளேயரும்
ஏரியல் ஷரோனும்
சந்தோஷித்திருப்பார்கள்…
உங்கள்
உறைந்த விழிகளின்
தீவிரம் காணாததால்


அஹ்மத் யாஸீன்
உங்கள்
சிதறிய சடலத்துக்கு
கூட
இத்தனை சக்தியா?

பனிச்சுனை
நீர்கசியும்
இருதயத்தில்
இத்தனை
உறுதிப்பூக்களா?

ஹமாஸ்-
இங்கு தானே
பூக்கள் புன்னகைத்தன
மரணத்தைக்கண்டு…

விழிகள் அசந்த போது
விழிப்பாய் வந்த
ஹமாஸ்

பிஞ்சு நெஞ்சில்
விதையாய் விழுந்து
விருட்சமாய் விரிந்த
ஹமாஸ்

மரணம்
இங்கு கெளரவிக்கப்படுகிறது,
யாஸீனைத் தழுவியதால்…

அஹ்மத் யாஸீன்
நீங்கள் புதைக்கப்படுகிறீர்கள்…
இன்திபாழா
உயிர்த்தெழுகிறது.

வல்லரசின்
நிம்மதி தொலைத்த
உங்கள்
வெண்கலக்குரல்

மனசு வருடும்
அந்த
விழிகளின் தீர்க்கம்!


இன்னும் நரைக்காத
உங்கள் இதயம்!

யாஸீனே
எங்கிருக்கிறீர்?

மரணம் சிதைக்காத
அந்த
புன்னகையோடு
சுவனத்தோட்டத்தில்
உலவிக்கொண்டா???

இனி
ஓங்கி ஒலிக்கப்போகும்…
ஹமாஸின் அலைவரிசைக்காய்
காத்துக் கொண்டா???

பொறுத்திருங்கள்
நாங்களும் வருகிறோம்.

.................................................................................................................
உயிர்த்தியாகிகள் மரணிப்பதில்லை.மெழுகு கரைகிறதே என்று திரி எரியாமல் அணைவதில்லை.
அஹ்மத் யாஸீன் அவரது மரணத்தால் மனதுகள் வலிக்கலாம்.
ஆனால் தீயின் நாக்குகளில் போராளிகள் பொசுங்கிப்போவதில்லை.
....................................................................
2004 March 24th
copyright@shameela_yoosufali©



Friday, May 30, 2008

சிலுவை




















நிலவில் குந்தியிருந்து
நட்சத்திரங்களில்
முதுகு சாய்த்து...
கவி தைக்கும்
என்தோழர்களே!!!


என்தேசத்தில்
தென்றல்
நின்று விட்டது!


பூக்கள்சொரிந்த
ஓர்கிட் செடிகள்...


பனித்துளிஉறங்கிய
பச்சைப் புல்வெளிகள்...


ஹைகூ பாடிய
ஏரிக்கரை
நாணற்புதர்கள்....


எல்லாவற்றையும்
சிலுவையில்
அறைந்தாகி விட்டது!


காற்றை
சுருக்கிக் கொண்டே
வந்து விழும்
குண்டுகளின் இடைவேளையில்...


முகங்களை
பச்சை ரத்தத்தால்
போர்த்திக் கொண்ட
சடலங்களின் நடுவில்...


உயிர் வேரை
உசுப்பிக் கொண்டே
தாழப்பறக்கும்
இயந்திரப்பறவையின்
இரைச்சலினூடே....


என்கவிதை
உயிர்தெழுகிறது!!!

copyrights@shameela

Monday, March 31, 2008

அகதி

சுட்டு விரல்
பட்டுசிலிர்க்கும்…
வேலியோர
மொட்டுமல்லி!

விட்டு விட்டு
பூத்தூவும்…
மேகப்பஞ்சு!
அலுக்காமல்
என்னோடு ஓடி வரும்…
ஒற்றை நிலா!

வாசலுக்கு

வரும் போதெல்லாம்
தலை சிலுப்பிவரவேற்கும்
முன் வாசல்
வேப்ப மரம்!

என்கவிதை பொறுக்கி
கிறுக்குப் பிடித்த
என்னறை
ஜன்னல் கம்பி!

நான்
காதலோடு வந்தமரும்
மருதமரப் பந்தல்பதித்த
நதிக்கரை!

……………………….
ஒன்றும் ரசிக்கவில்லை
………………………..
எல்லாமே
எனக்கு
அந்நியமாய்….

எனக்கெதிராய் சதிசெய்வதாய்
…..…………………….……
…………………………

என் உயிர்
முளைத்து சடைத்த
என் தேசம்
எனக்கினி
சொந்தமில்லை!!!
1998 ஜுலை 14


copyrights©shameela_yoosuf_ali

Sunday, March 30, 2008

முடிவிலிப்பாதை!


















என்னவனே!
நீயும் நானும்
சேர்ந்து நடந்த
நதிக்கரையோரம்
உன்
ஞாபகப்பூக்கள்
மெளனமாய் உதிர்கின்றன!





உன்
வாசம் சுமந்த
வாடைக்காற்று..
உயிர் கிள்ளுகிறது!






பாதச்சூட்டில்
பனி உதிர்க்கும்...
டிஸம்பர் மாதப்புல்வெளிகளில்
இன்னும்
ஈரச்சுவடுகள்!!!







































துப்பாக்கிச்சன்னம் தின்ற
உன் உடலை
எரித்தபோதே...
என் எதிர்காலமும்
ஏக்ககனவுகளும்
ஒரேயடியாய் கரிந்து போயின!






கசங்கிய இதயத்தில்...
ஒரு மூலையில்
காதல் மட்டும்
பத்திரமாய்...




என் வீட்டு மல்லிகைப்பந்தல்
எப்போதும் போல...
மொட்டுக்களை
பிரசவிக்கின்றது!



 


..............
கிள்ளும் போது தான்
இதயம்
வலிக்கிறது!





































நிலா காயும் முன்னிரவில்...
முறிந்த வேலிக்கம்புகளூடே
உன் முகம்
பிரகாசமாய்....




எங்கோ தலைகோதும்
தென்றல் காற்றில்..
தென்னங்கீற்றின்
சலசலப்பில்...
உன்
முரட்டுக்குரல்
சங்கீதமாய்...






தூக்கத்தின்
ஆழ்ந்த கர்ப்பத்தில்
உன் கருகிய சடலம்..
திடுக்கிடும் கனவாய்!!
விக்கித்துப்போகிறது
விம்மும் மனசு!!!




என்னவனே!
என் கனவுகளை
காயப்படுத்தாதே!!!




துணை இழந்த
அன்றிலாய்
நானின்னும்
வாழ வேண்டியிருக்கிறது!




யுத்தம் தின்ற
தேசத்தின் எச்சங்களில்...
உன் கனவுகளின்
மிச்சம் தேடி...
களைத்துப்போனேன்!!!




காதலா!!!
என்னையும்
உன்னையும்
ஏங்கிய இலட்சியத்தையும்
எரித்துப்பொசுக்கிய
போர்த்தீக்கு
இன்னுமா தாகம்???




என்றைக்குமாய்
நீ
எரிந்தபோது...
தொடும் தூரத்தில்
என்
இதயமும் எரிந்தது!!!


இது
முடிவிலிப்பாதை!!!


கவிதை முதலிடம்
மாணவ சாகித்திய விழா 2001
உயர்கல்வி மட்டம்
பேராதனைப்பல்கலைக்கழகம்.

copyrights©shameela_yoosuf_ali