Sunday, March 30, 2008

முடிவிலிப்பாதை!


















என்னவனே!
நீயும் நானும்
சேர்ந்து நடந்த
நதிக்கரையோரம்
உன்
ஞாபகப்பூக்கள்
மெளனமாய் உதிர்கின்றன!





உன்
வாசம் சுமந்த
வாடைக்காற்று..
உயிர் கிள்ளுகிறது!






பாதச்சூட்டில்
பனி உதிர்க்கும்...
டிஸம்பர் மாதப்புல்வெளிகளில்
இன்னும்
ஈரச்சுவடுகள்!!!







































துப்பாக்கிச்சன்னம் தின்ற
உன் உடலை
எரித்தபோதே...
என் எதிர்காலமும்
ஏக்ககனவுகளும்
ஒரேயடியாய் கரிந்து போயின!






கசங்கிய இதயத்தில்...
ஒரு மூலையில்
காதல் மட்டும்
பத்திரமாய்...




என் வீட்டு மல்லிகைப்பந்தல்
எப்போதும் போல...
மொட்டுக்களை
பிரசவிக்கின்றது!



 


..............
கிள்ளும் போது தான்
இதயம்
வலிக்கிறது!





































நிலா காயும் முன்னிரவில்...
முறிந்த வேலிக்கம்புகளூடே
உன் முகம்
பிரகாசமாய்....




எங்கோ தலைகோதும்
தென்றல் காற்றில்..
தென்னங்கீற்றின்
சலசலப்பில்...
உன்
முரட்டுக்குரல்
சங்கீதமாய்...






தூக்கத்தின்
ஆழ்ந்த கர்ப்பத்தில்
உன் கருகிய சடலம்..
திடுக்கிடும் கனவாய்!!
விக்கித்துப்போகிறது
விம்மும் மனசு!!!




என்னவனே!
என் கனவுகளை
காயப்படுத்தாதே!!!




துணை இழந்த
அன்றிலாய்
நானின்னும்
வாழ வேண்டியிருக்கிறது!




யுத்தம் தின்ற
தேசத்தின் எச்சங்களில்...
உன் கனவுகளின்
மிச்சம் தேடி...
களைத்துப்போனேன்!!!




காதலா!!!
என்னையும்
உன்னையும்
ஏங்கிய இலட்சியத்தையும்
எரித்துப்பொசுக்கிய
போர்த்தீக்கு
இன்னுமா தாகம்???




என்றைக்குமாய்
நீ
எரிந்தபோது...
தொடும் தூரத்தில்
என்
இதயமும் எரிந்தது!!!


இது
முடிவிலிப்பாதை!!!


கவிதை முதலிடம்
மாணவ சாகித்திய விழா 2001
உயர்கல்வி மட்டம்
பேராதனைப்பல்கலைக்கழகம்.

copyrights©shameela_yoosuf_ali






2 comments:

முகவைத்தமிழன் said...

இதயத்தை தொட்ட கவிதை!!

உரக்கத்தில் இருந்து எழுந்து திரும்பவும் படித்த கவிதை இது.

நன்றி
TAMIL MUSLIM READER - தமிழ் முஸ்லிம் திரட்டி

Albert Fernando said...

இதயம் வலிக்கும்,
கண்கள் பனிக்கும்,
இது கவிதையில்லை;
காலதேவனின்
கால்நடைப் பயணத்தில்
முடிவில்லா
ஏக்கங்கள்,
கதறல்கள்,
வெளிக்கிளம்பாமல்
மவுனமாய் மனதுக்குள்
வெடித்துச் சிதறும்

வெளிப்பாடாய்
மனம்
வெந்து விழுந்த‌
இரத்தச் சகதியில்
தோய்ந்த சொற்கள்....!

Sunday, March 30, 2008

முடிவிலிப்பாதை!


















என்னவனே!
நீயும் நானும்
சேர்ந்து நடந்த
நதிக்கரையோரம்
உன்
ஞாபகப்பூக்கள்
மெளனமாய் உதிர்கின்றன!





உன்
வாசம் சுமந்த
வாடைக்காற்று..
உயிர் கிள்ளுகிறது!






பாதச்சூட்டில்
பனி உதிர்க்கும்...
டிஸம்பர் மாதப்புல்வெளிகளில்
இன்னும்
ஈரச்சுவடுகள்!!!







































துப்பாக்கிச்சன்னம் தின்ற
உன் உடலை
எரித்தபோதே...
என் எதிர்காலமும்
ஏக்ககனவுகளும்
ஒரேயடியாய் கரிந்து போயின!






கசங்கிய இதயத்தில்...
ஒரு மூலையில்
காதல் மட்டும்
பத்திரமாய்...




என் வீட்டு மல்லிகைப்பந்தல்
எப்போதும் போல...
மொட்டுக்களை
பிரசவிக்கின்றது!



 


..............
கிள்ளும் போது தான்
இதயம்
வலிக்கிறது!





































நிலா காயும் முன்னிரவில்...
முறிந்த வேலிக்கம்புகளூடே
உன் முகம்
பிரகாசமாய்....




எங்கோ தலைகோதும்
தென்றல் காற்றில்..
தென்னங்கீற்றின்
சலசலப்பில்...
உன்
முரட்டுக்குரல்
சங்கீதமாய்...






தூக்கத்தின்
ஆழ்ந்த கர்ப்பத்தில்
உன் கருகிய சடலம்..
திடுக்கிடும் கனவாய்!!
விக்கித்துப்போகிறது
விம்மும் மனசு!!!




என்னவனே!
என் கனவுகளை
காயப்படுத்தாதே!!!




துணை இழந்த
அன்றிலாய்
நானின்னும்
வாழ வேண்டியிருக்கிறது!




யுத்தம் தின்ற
தேசத்தின் எச்சங்களில்...
உன் கனவுகளின்
மிச்சம் தேடி...
களைத்துப்போனேன்!!!




காதலா!!!
என்னையும்
உன்னையும்
ஏங்கிய இலட்சியத்தையும்
எரித்துப்பொசுக்கிய
போர்த்தீக்கு
இன்னுமா தாகம்???




என்றைக்குமாய்
நீ
எரிந்தபோது...
தொடும் தூரத்தில்
என்
இதயமும் எரிந்தது!!!


இது
முடிவிலிப்பாதை!!!


கவிதை முதலிடம்
மாணவ சாகித்திய விழா 2001
உயர்கல்வி மட்டம்
பேராதனைப்பல்கலைக்கழகம்.

copyrights©shameela_yoosuf_ali






2 comments:

முகவைத்தமிழன் said...

இதயத்தை தொட்ட கவிதை!!

உரக்கத்தில் இருந்து எழுந்து திரும்பவும் படித்த கவிதை இது.

நன்றி
TAMIL MUSLIM READER - தமிழ் முஸ்லிம் திரட்டி

Albert Fernando said...

இதயம் வலிக்கும்,
கண்கள் பனிக்கும்,
இது கவிதையில்லை;
காலதேவனின்
கால்நடைப் பயணத்தில்
முடிவில்லா
ஏக்கங்கள்,
கதறல்கள்,
வெளிக்கிளம்பாமல்
மவுனமாய் மனதுக்குள்
வெடித்துச் சிதறும்

வெளிப்பாடாய்
மனம்
வெந்து விழுந்த‌
இரத்தச் சகதியில்
தோய்ந்த சொற்கள்....!