வாழ்வெனும் பெரு நிலப்பிரப்பில்
மீண்டுமொரு முறை
தனியளாகிறேன்…
முடிவுறாத ஓட்டத்தில்
களைத்துயிர்
சாய்கிறேன்.
தோற்றுப்போகிறேன்…
ஒரு
ரசிப்பிற்குரிய கர்வம்
சிறகுடைந்து வீழ்கிறது…
அழத்திராணியழிந்த இதயம்
உள்ளுக்குள்
வலிச்சிலுவையில்
கைகளை நீட்டியபடி…
விழிகளை மூடினால்
சுடுகிறது
தணல்துண்டிமைகள்….
உன்
சந்தோஷங்களுக்காக
மொத்தமாய்
நான் தோற்றுப்போகிறேன்!!!
4 comments:
the wordings of your poem is very keen. it represents my life also. i could feel the warmth of love
நன்றி தமிழ்குறிஞ்சி
நம் வாழ்க்கை இன்னொரு வாழ்க்கையின் கண்ணாடி தான் சகோதரர் செல்வா..நன்றிகள்
கவிதை அழகாக இருக்கிறது. வரிகளும்தான்.தோற்றுப்போவதில் கூட அழகாக. காயப்படுத்தாமல் காயப்படுத்தும் காதலைப்போல் வார்த்தைகளில் உயிரோடிருக்கும் வலி உங்கள் கவிதையின் வலிமை.
நானும் தோற்றுப் போனேன்....
http://kanneerpookkal.wordpress.com/
Post a Comment