Monday, June 13, 2011

ஊதா யானை

சுத்தமாய் வெள்ளைத்தாள்
சிதறிய கிரெயோன் கலர்கள்
இரண்டு கோடுகள்
ஒரு கோணல் வட்டம்
நம்பிக்கையோடு
யானைக்கும் தும்பிக்கையும் ஆயிற்று

குழந்தைக்கோ கர்வம்
ஊதா நிற யானையுடன் ஊர்ந்து போயிற்று.

யானைக்கு ஊதாநிறமா?
அதிருப்தியோடு கேட்டார் ஆசிரியை
இரண்டு கால் யானை எங்குள்ளது
அடித்துத் திருத்தினார்

குழந்தையின் ஊதா யானை ஊனமுற்றுப்போக
அதன் மனசின் மேலே தன் செருப்பு சப்திக்க
நடந்து போனார் ஆசிரியை.

2011.06.13

4 comments:

Anonymous said...

மனசின் மேலே தன் செருப்பு சப்திக்க
நடந்து போனார் ஆசிரியை.
eppothuthaan maarum ippadiyaane aasiriya samooham?
manathil nirkum arumaiyaane kavithai.
vaalththukkal soderi.
s.faiza Ali

Unknown said...

நன்றிகள் சகோதரி

Azmin Aiyoob said...

இந்தக்கவிதை எல்லா பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கும் அனுப்ப வழி செய்யவேண்டும், அதற்கு ஏதாவது முயற்சிகள் உண்டா, இல்லையெனில் என்னால் உதவ முடியும் இன்ஸா அல்லாஹ். என்றும் நன்றே செய் அதுவும் இன்றே செய்.
வாழ்த்துக்கள்

Unknown said...

நன்றிகள் சகோதரர்,ஆவன செய்வீர்களாயின் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வேன்.