Sunday, May 24, 2009

புத்தரின் விழிகள்

வன்னிக்காடுகளே…
எரியுங்கள்!!!

நீண்டு நெடித்த
தெருக்களே…
நொடித்துப்போங்கள்!!!

அதோ…
அப்பம் சுட்டே
சுருங்கிப்போன
ஒரு மூதாட்டியின்
நொருங்கிப்போன
சடலம்!!!

துண்டுப்பாண் அணைத்த
பிஞ்சுக்கைகள்
துண்டித்துக்கிடக்கின்றன!!!

புத்தரின் விழிகள்
மூடியே
இருக்கின்றன!!!

நான்
ஓர் இலங்கையள்…
வெட்கிக்கிறேன்…
கையாலாகாத
என் பேனா
தலை குனிகிறது!!!

கொடுமணல் வெளியில்
மழைத்துளி
வாழுமா?

அரசிலை வேரில்
இரத்த ஆறுகளா?

புத்தரின் விழிகள்
மூடியே
இருக்கின்றன!!!

Friday, May 22, 2009

இரத்த ஆறும் வெற்றி ஓடமும்

கடுங்கோடை கழிந்து மழை வர்ஷிக்கத் தொடங்கியிருக்கிறது.
இலங்கையில் எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி ஆரவாரம்.
மே 18 2009 விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து இலங்கையை மீட்டு எடுத்து விட்டதாகவும் ,விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கொன்று விட்டதாகவும் இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

பட்டாசு வெடிகளில் இலங்கையின் வீதிகள் அதிர்ந்தன.
‘கிரிபத்’எனும் பாற்சோறு சமைத்து இலங்கை பெரும்பான்மை மக்கள், நாட்டை காத்த ஜனாதிபதி பற்றி பெருமிதப்பட்டனர்.
வீடுகள் வாகனங்களில் தேசியக்கொடி பறந்தது.
ஆட்டமும் பாட்டமும் அதிகரிக்க புத்தரின் ஐந்து சீலங்களையும் பெளத்தர்கள் மறந்து விட்டதைத் தெளிவாகவே காண முடிந்தது.

இந்த ஆரவாரத்துக்குள் எமது சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த பலரும் பங்கெடுத்தது பயத்திலா அல்லது அறியாமையிலா என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.எது எவ்வாறாயினும் எமது சுயகெளரவத்தையும் கொள்கையையும் ,சமூக நல்லிணக்கம் என்ற போர்வை போர்த்திய அடக்கியாள்கைக்காய் விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை என்பது புரிதலுக்குரியது.
இந்த ‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்’திற்காய் நாம் கொடுத்த விலை மிக மிக அதிகமானது.
பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் காவு கொண்ட இரத்த ஆற்றின் மீதில் தான் இந்த வெற்றியின் ஓடம் மிதக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
விடுதலைப்புலிகளின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகளின் எதிரொலிகளால் நாம் பாதிக்கப்பட்டதை நாம் இன்னும் மறந்து விடவில்லை.
எனினும் இந்தப்போரில் இலங்கை அரசின் குறி சமாதானமா இனச்சுத்தீகரிப்பா என்ற மாபெரும் கேள்வி மறுக்க முடியாமல் எழுகிறது.
சர்வதேசத்தின் அழுத்தங்களையும்,போரியல் விதிகளையும் மீறி பொதுமக்கள் அகதிகளாய் தஞ்சம் புகுந்திருந்த முகாம்களைக்கூட வெஞ்சம் கொண்டு தாக்கியழித்திருக்கிறது இலங்கை இராணுவம்.
வன்னியின் நீண்டு நெடித்துப் போன தெருக்களிலே மனிதம் மரித்துக் கிடக்கிறது.
பக்கம் சராத ஊடகவியலாளர்களுக்குக் கூட போர்ப்பிரதேசத்துக்குள் அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது.

சொல்லப்படும் இந்த சமாதானம் எவ்வளவு யதார்த்தமானது என்பதை வருங்காலம் தீர்மானிக்கும்.சிறுபான்மை மக்களின் உரிமைகளை அரசு எவ்வாறு மதித்து நடக்கப்போகிறது என்பதை நாம் அவதானத்துடன் நோக்கியவண்ணம் இருக்கிறோம்.ஏனெனில் யுத்தத்தில் எவரும் வெற்றியடைவதில்லை…அது வடுக்களையும் வலிகளையும் மட்டுமே விட்டுச்செல்கிறது.
கடந்த காலங்கள் நம்பிக்கை தருவதாக இல்லாத பட்சத்திலும் சிறுபான்மையினரின் கெளரவமும் இருப்பும் உறுதிப்படுத்தப்படும் வகையிலான திருப்திகரமான ஒரு தீர்வு யோசனை முன்வைக்கப்படுமாயின் அது வரவேற்புக்குரியது.
முற்கம்பி வேலிகளுக்குள் சிறைப்பட்டிருக்கும் எம் சகோதர தமிழர்களுக்காய் அனுதாபப்பெருமூச்சுக்களுக்கு மேலதிகமாக நாம் எதைச் செய்யப்போகிறோம்?
சிந்திக்க வேண்டிய வினா இது!!!

Thursday, February 12, 2009

ஓரங்குலமும் அசையேன்

என்
பேனாவை நிலத்தில்
குத்தி
உடை!!!

என் மடிக்கணணியை
பிடுங்கி
ஓங்கி நிலத்தில்
அடி!!!

என்
குரல்வளையை
உன் விரலிடுக்கில்
நசுக்கு!!!

துப்பாக்கியை
தொண்டைக்குள்
குத்து!

அநீதிக்கெதிராய் கொதிதெழுந்தவர்களின்
சடலங்களைக்
காட்டு….

என்னை
சின்னாபின்னப்படுத்து….

என் குடும்பத்தை
இகழ்….

என் பாதையை
பெயர்த்து எடு…

நான் வாழும்
குடிசைக்கு
நெருப்பு வை

என்
சோற்றில்
நஞ்சு வை

என் எழுத்துக்களில்
காறித்துப்பு

உன்
எதேச்சதிகாரத்துக்கெதிராக
ஓரங்குலமும் அசையேன்.

என் உடல் கீறிய
ஒழுகும் குருதித்துளிகள்
எழுதும்
உனக்கெதிரான
தீர்ப்பை….

Saturday, February 7, 2009

மெளனத்தின் அழுத்தம்

உடைந்து போகின்ற
சப்தத்தின் சில்லுகளை
விட
மெளனத்தின் அழுத்தம்
எனக்கு பிரியம்.

கழுத்து நரம்பை
புடைக்கச்செய்யும்
கோபம் மறைத்து…
காதுமடல் வரை
நீண்ட சிரிப்பு

சோகம் …
வேதனை…
வலி…
சுமந்து
மரத்துப்போன
உள்ளம்

மரணத்தின் வலியா
இது
வாழ்க்கையின் வலியா
இன்னும்
புரியவில்லை

கடுங்குளிரிலும்
வேர்த்து அவியும்
மனசு

இணைய முடியாத
தண்டவாளங்களா
நாம்?

உடைந்து போகின்ற
சப்தத்தின் சில்லுகளை
விட
மெளனத்தின் அழுத்தம்
எனக்கு பிரியம்.

2009.02.06
shameela_yoosufali@copyright

Monday, February 2, 2009

தாயே நான் தாகித்திருக்கிறேன்

மரணக்கோப்பையில்
வாழ்க்கை
வழிந்து கொண்டிருக்கும்
இந்த நிமிடம்…
இரவும்
இன்னுமொரு பகல் தான்!

தாயே
நான் தாகித்திருக்கிறேன்!!

‘பலஸ்தீன் எங்கள் பூமி’
குருதிச்சொட்டுக்கள்
குறிப்பெடுக்கின்றன….

பலஸ்தீன நீர்ச்சொட்டுக்கள்
இஸ்ரேலிய சஹாராவில்
அவிழ்ந்து விழுகின்றன!

நரம்புகளிலிருந்து
உயிர்
தெறிக்கத்துடிக்கிறது!

கொதித்துக் கொண்டிருந்த
இரத்தப்புயல்…
பிடறிகளை
புடைத்துக்கொண்டு
புறப்பட்டு விட்டது!

அன்னையே
அழாதீர்கள்…

இனிமையான
எங்கள் நாட்கள்
களவாடப்பட்டு விட்டன.

எப்போது
இதயத்தை
ஈமானிய ஒளியால்
இறுக்கிக்கொண்டேனோ
அப்போதே
ஜிஹாதின் களத்தில்
என்னுயிரை
இறக்கிக்கொண்டேன்!

மலர்களையல்ல
முற்களை முத்தமிடத்தான்
என்
இளமை உதடு
துடிக்கிறது!

இற்றுப்போன
‘நேற்று’க்களிலும்
நம்பிக்கையில்லாத
‘நாளை’களிலும் அல்ல
இந்த நிமிட
‘இன்று’களில் தான்
எதிர்காலம்
வாழ்கிறது!

இப்போதெல்லாம்
பலஸ்தீனத்துப் பூவுக்குள்ளும்
பூகம்பச்சிரிப்பு!!

அன்னையே
அழாதீர்கள்

அடிமை தேசத்து
ஆட்சியாளனை
விட
சுதந்திர தேசத்தின்
ஷஹீதாகிறேன்!

சன்னம் துளைத்த
சடலங்களின் விழிகளில்
விடுதலை ராகம்!

தாயே
நான் தாகித்திருக்கிறேன்

இருட்டை
விசாரிக்கும்
வெளிச்சம் நான்!

கடைசித் துளி
உயிர்
காயும் வரைக்கும்
இந்த உணர்ச்சிகள்
மூர்ச்சிக்காது!

அன்னையே
அழாதீர்கள்

பலஸ்தீனின்
ஒவ்வொரு அபாபீலும்
பிஞ்சுக்கற்களைப்
பொத்திப்பிறக்கும்
காலம் வரும்…

காஸா தீரம்
கடற்பறவைகளின் கானம்…
தக்பீரின் நாதம்
இதோ
என் அருகில்

1998

Friday, January 30, 2009

பழைய கொப்பியிலிருந்து…

ஆரம்ப வகுப்பு ஆசிரியைகளை மறக்க முடியாதது போலவே என்னால் இந்தக் கட்டுரையையும் மறக்க முடிவதில்லை.
‘எனக்கு சிறகு முளைத்தால்…’என்ற தலைப்பில் பிஞ்சு வயதில் நான் வரைந்த கட்டுரை இது.
ஆண்டு 1 முதல் 5 வரை எனது வகுப்பாசிரியையாக இருந்த என் நேசத்துக்குரிய பெளஸியா அவர்களை நன்றிகளோடு நினைவு படுத்துகிறேன்.
என் மொழி வளத்துக்கும் ,நேர்த்தியான எழுத்துக்கும்,வாசிப்புத்தாகத்துக்கும் அடித்தாளமாய் இருந்து என்னை ஊக்குவித்த இன்னொரு தாய் அவர்.
சில விடயங்களை வெறும் வார்த்தைகளால் சொல்லி விட முடியாது.
மெளனத்தின் சப்தங்களோடு………

Monday, January 26, 2009

நரைக்காத இதயம்

ஊசி ஊசியாய்
உடல் குறுக்கும்
பனிக்குளிர் இரவு !

இருள் முக்காடு
தளர்த்தி
மெல்ல முகிழ்க்கும்
அதிகாலை !

நொண்டி நொண்டி
வரும்
கடல் காற்று !

அபாபீலின் குருதியாய்
சிவக்கும்
கிழக்கு வானம் !

ஈரம் காயாத மண்ணில்
விழுதிறக்கும்
சுஜூதுகள் !

உதடு வலிக்காமல்
விரியும்
முதல் பிரார்த்தனை !

ஒரு விநாடி
…………..
ஒரே விநாடி

தூங்கப்போன
நிலவு
துடித்தெழுந்தது,

உயிர் வேர்களில்
மின்சாரம்
பாய்ந்தது.

ஹெலியே
எப்படித்துணிந்தாய்…
எப்படித்துணிந்தாய்…
எங்கள்
யாஸீனைக் கொல்ல…

இலை மடியிலிருந்து
அவிழும்
பனித்துளி போல…

காம்புக்கு வலிக்காமல்
கழன்று விழும்
ஒற்றை ரோஜா போல…

நீங்கள் சென்றீர்கள்……..
எங்கள் இதயங்களோடு

‘உயிர்த்தியாகியாய்
மரணிப்பேன்”
வலிக்கும் அவ்வார்த்தை
ஒலிக்கிறது என்னுள்…

சக்கர நாற்காலி
சந்தோஷப்பட்டிருக்கும்
ஒரு ஷஹீதைச்சுமந்த
கனதியில்…

உதடுகளில்
உலாவரும்
அந்த
புதிய புன்னகை…

கனிவும்
காயாத தெளிவும்
கலந்த
அந்தக் கண்களின்
வலிமை…

தளர்ந்த உடல்
தாங்கி நடக்கும்
எஃகு இதயம்…

இதயம் பிழிகிறது !
வெடித்து
வெளிவருகிறது
விம்மலோசை…

புஷ்ஷும் பிளேயரும்
ஏரியல் ஷரோனும்
சந்தோஷித்திருப்பார்கள்…
உங்கள்
உறைந்த விழிகளின்
தீவிரம் காணாததால்

அஹ்மத் யாஸீன்
உங்கள்
சிதறிய சடலத்துக்கு
கூட
இத்தனை சக்தியா?

பனிச்சுனை
நீர்கசியும்
இருதயத்தில்
இத்தனை
உறுதிப்பூக்களா?

ஹமாஸ்-
இங்கு தானே
பூக்கள் புன்னகைத்தன
மரணத்தைக்கண்டு…

விழிகள் அசந்த போது
விழிப்பாய் வந்த
ஹமாஸ்

பிஞ்சு நெஞ்சில்
விதையாய் விழுந்து
விருட்சமாய் விரிந்த
ஹமாஸ்

மரணம்
இங்கு கெளரவிக்கப்படுகிறது,
யாஸீனைத் தழுவியதால்…

அஹ்மத் யாஸீன்
நீங்கள் புதைக்கப்படுகிறீர்கள்…
இன்திபாழா
உயிர்த்தெழுகிறது.

வல்லரசின்
நிம்மதி தொலைத்த
உங்கள்
வெண்கலக்குரல்

மனசு வருடும்
அந்த
விழிகளின் தீர்க்கம்!

இன்னும் நரைக்காத
உங்கள் இதயம்!

யாஸீனே
எங்கிருக்கிறீர்?

மரணம் சிதைக்காத
அந்த
புன்னகையோடு
சுவனத்தோட்டத்தில்
உலவிக்கொண்டா???

இனி
ஓங்கி ஒலிக்கப்போகும்…
ஹமாஸின் அலைவரிசைக்காய்
காத்துக் கொண்டா???

பொறுத்திருங்கள்
நாங்களும் வருகிறோம்.

.................................................................................................................
உயிர்த்தியாகிகள் மரணிப்பதில்லை.மெழுகு கரைகிறதே என்று திரி எரியாமல் அணைவதில்லை.
அஹ்மத் யாஸீன் அவரது மரணத்தால் மனதுகள் வலிக்கலாம்.
ஆனால் தீயின் நாக்குகளில் போராளிகள் பொசுங்கிப்போவதில்லை.
....................................................................
2004 March 24th
copyright@shameela_yoosufali©