வாழ்வெனும் பெரு நிலப்பிரப்பில்
மீண்டுமொரு முறை
தனியளாகிறேன்…
முடிவுறாத ஓட்டத்தில்
களைத்துயிர்
சாய்கிறேன்.
தோற்றுப்போகிறேன்…
ஒரு
ரசிப்பிற்குரிய கர்வம்
சிறகுடைந்து வீழ்கிறது…
அழத்திராணியழிந்த இதயம்
உள்ளுக்குள்
வலிச்சிலுவையில்
கைகளை நீட்டியபடி…
விழிகளை மூடினால்
சுடுகிறது
தணல்துண்டிமைகள்….
உன்
சந்தோஷங்களுக்காக
மொத்தமாய்
நான் தோற்றுப்போகிறேன்!!!