Tuesday, April 15, 2008

தொடுவானம்



புழுதி படர்ந்த...
வானம்!

சோகம் சுமந்த...
காற்று!!!

வியர்வைப்பூக்களை உதிர்க்கும்....
வெப்பப் பகல்!

தூரத்தில் மங்கலாய்...
தொடு வானம்!

ஒவ்வொரு
எலும்பையும்
துளைத்தெடுக்கும்...
குளிர் இரவு!

விழிகளை
வலிக்கச் செய்யும்...
முடிவிலிப் பாலைவனம்!

இங்கு தான்
என் தாய்...
என்னைச் சுமந்தாள்!

நேற்று
இஸ்ரேலிய விஷமுற்களில்
இதயம் கிழிந்தேன்....
ஒரு
மெலிந்த சிறுவனாய்!

இன்று
ஏவுகணைக்குள் புதைந்த
என்தாய்த் தேசத்தில்
ஒட்டுப் போட்ட
ஆடையோடுமுளைக்கிறேன்....
ஒரு முஜாஹிதாய்.....

சோகக் கரு தரித்திருக்கும்
என் தாய் பூமியே!!
அழாதீர்கள்!!!

வசந்தம் சிலிர்த்த
என் வயதுகளைத்
தொலைத்தேன்!!!

வரண்ட பாலைவனத்திலும்
வற்றாத சுனை நீராய்...
சுகம் தந்த இஸ்லாம்!

இஸ்லாம்
என்காயங்களுக்கு
கட்டுப்போட்டது!

உடைந்த இதயத்துள்
ஒரு பூவாய்
மலர்ந்தது!

அழுத விழியோரத்தில்
ஒருகுளிர்ந்த பனித்துளியாய்
பரிணமித்தது!

என்தாய் பூமியே
அழாதீர்கள்.....

இதோ
ஒரு போராளியின்
சுட்டெரிக்கும்
சுவாசம்சுமந்து பிறக்கிறேன்!!!

ஏ அமெரிக்கா!!!
இதோ வருகிறேன்!!!
உன்
ஒவ்வொரு சுவட்டையும்
எரிப்பேன்...
என்தாய்கள்
அழுதவிழிநீர் கொண்டு!!!!
copyrights Shameela Yoosuf Ali
July 2007

Wednesday, April 2, 2008

யுக முடிவு









லப்.....டப்......
லப்.....டப்......
லப்.....டப்......
உலக உருண்டையின்
இறுதித்துடிப்பு!!!





இந்த நிமிடம்......
இந்த யுகமுடிவு.....
இப்போதைக்கில்லை
எனக் களித்தவனே !



என்ன செய்வாய் இனி?



உயிருக்குள்
வேர் விட்ட
உறவுகள்!



எறும்பூர்ந்து
சேமித்த
சொத்துக்கள்!



இரவெல்லாம்
துணை வந்த
நிலா விளக்கு!



உன் மூச்சை
உள்வாங்கி
தன் மூச்சைத் தந்த
பச்சைமரம் !



வைகறைச்சித்திரம்
தீட்டிய
சூரியத்தூரிகை !



வாசிக்காமல்
மிச்சம் வைத்த
நட்சத்திரப் புத்தகம் !



ஓ.....................
பனித்துளி சிலிர்த்த
இந்த
பூமிச்சிறுகதைக்கு

இனி நிரந்தர
முற்றுப்புள்ளி !



மானிடா !
உன்
கடைசிப் பயணத்துக்கு
கடைசி கடைசியாய்
எதைச்சேமித்தாய் ?

1998 may

Monday, March 31, 2008

சப்பாத்தின் தேய்வு.....




தேவைப்படும் போது
பாதம் சுழித்து’
உள் நுழைக்கவும்….
பதறிக்கழட்டவுமாய்
பார்த்துப் பார்த்து
வாங்கினாய்!

வெதும்பிய பாதங்களின் நாற்றத்தை…
சப்பாத்து
மெளனித்து சகித்தது….

சூரியனே உருகும்
தகிக்கும் தார்வீதி….
சப்பாத்து நடந்தது!

வடதுருவப்பனிப்பாளமாய்
குளிர்ந்த சாலை….
சப்பாத்து நடந்தது!

கைக்குட்டையால்
கவனமாய்
துடைத்ததெல்லாம்
கொஞ்சம் காலம்!

போகப்போக….
சப்பாத்து
தேய்ந்து போனது!!

தேய்ந்தாலென்ன?
புதிதாய் வாங்குவதா சிரமம்
copyrights©shameela_yoosuf_ali








அகதி

சுட்டு விரல்
பட்டுசிலிர்க்கும்…
வேலியோர
மொட்டுமல்லி!

விட்டு விட்டு
பூத்தூவும்…
மேகப்பஞ்சு!
அலுக்காமல்
என்னோடு ஓடி வரும்…
ஒற்றை நிலா!

வாசலுக்கு

வரும் போதெல்லாம்
தலை சிலுப்பிவரவேற்கும்
முன் வாசல்
வேப்ப மரம்!

என்கவிதை பொறுக்கி
கிறுக்குப் பிடித்த
என்னறை
ஜன்னல் கம்பி!

நான்
காதலோடு வந்தமரும்
மருதமரப் பந்தல்பதித்த
நதிக்கரை!

……………………….
ஒன்றும் ரசிக்கவில்லை
………………………..
எல்லாமே
எனக்கு
அந்நியமாய்….

எனக்கெதிராய் சதிசெய்வதாய்
…..…………………….……
…………………………

என் உயிர்
முளைத்து சடைத்த
என் தேசம்
எனக்கினி
சொந்தமில்லை!!!

1998 ஜுலை 14


copyrights©shameela_yoosuf_ali

Sunday, March 30, 2008

சருகு



இலை விட்டு
கிளை
விட்டு
விசாலமான
விருட்சமாய்
நீயின்று.....




விதையாய் சிலிர்க்க
மடியாகி....


தளிராய் துளிர்க்கையில்
தலை தடவி....
உரம் பெற்று ஒங்க
உரமாகி...
.......................

ஓரத்தில்
படபடக்கும்
சருகுக்கும்
இதயமுண்டு...

copyrights©shameela_yoosuf_ali

முடிவிலிப்பாதை!


















என்னவனே!
நீயும் நானும்
சேர்ந்து நடந்த
நதிக்கரையோரம்
உன்
ஞாபகப்பூக்கள்
மெளனமாய் உதிர்கின்றன!





உன்
வாசம் சுமந்த
வாடைக்காற்று..
உயிர் கிள்ளுகிறது!






பாதச்சூட்டில்
பனி உதிர்க்கும்...
டிஸம்பர் மாதப்புல்வெளிகளில்
இன்னும்
ஈரச்சுவடுகள்!!!







































துப்பாக்கிச்சன்னம் தின்ற
உன் உடலை
எரித்தபோதே...
என் எதிர்காலமும்
ஏக்ககனவுகளும்
ஒரேயடியாய் கரிந்து போயின!






கசங்கிய இதயத்தில்...
ஒரு மூலையில்
காதல் மட்டும்
பத்திரமாய்...




என் வீட்டு மல்லிகைப்பந்தல்
எப்போதும் போல...
மொட்டுக்களை
பிரசவிக்கின்றது!



 


..............
கிள்ளும் போது தான்
இதயம்
வலிக்கிறது!





































நிலா காயும் முன்னிரவில்...
முறிந்த வேலிக்கம்புகளூடே
உன் முகம்
பிரகாசமாய்....




எங்கோ தலைகோதும்
தென்றல் காற்றில்..
தென்னங்கீற்றின்
சலசலப்பில்...
உன்
முரட்டுக்குரல்
சங்கீதமாய்...






தூக்கத்தின்
ஆழ்ந்த கர்ப்பத்தில்
உன் கருகிய சடலம்..
திடுக்கிடும் கனவாய்!!
விக்கித்துப்போகிறது
விம்மும் மனசு!!!




என்னவனே!
என் கனவுகளை
காயப்படுத்தாதே!!!




துணை இழந்த
அன்றிலாய்
நானின்னும்
வாழ வேண்டியிருக்கிறது!




யுத்தம் தின்ற
தேசத்தின் எச்சங்களில்...
உன் கனவுகளின்
மிச்சம் தேடி...
களைத்துப்போனேன்!!!




காதலா!!!
என்னையும்
உன்னையும்
ஏங்கிய இலட்சியத்தையும்
எரித்துப்பொசுக்கிய
போர்த்தீக்கு
இன்னுமா தாகம்???




என்றைக்குமாய்
நீ
எரிந்தபோது...
தொடும் தூரத்தில்
என்
இதயமும் எரிந்தது!!!


இது
முடிவிலிப்பாதை!!!


கவிதை முதலிடம்
மாணவ சாகித்திய விழா 2001
உயர்கல்வி மட்டம்
பேராதனைப்பல்கலைக்கழகம்.

copyrights©shameela_yoosuf_ali






Wednesday, March 26, 2008

கனவின் மிச்சம்


நிலவின் கிரணங்கள்….
மெல்லிய வர்ணமாய்
பூமிச்சித்திரத்தில்
வந்து விழுகின்றன !

வெள்ளித்துணுக்குகள்
பதித்த வானம்..
ஏகாந்தமாய் ஒளிர்கிறது !
இதயமே கழன்று விடுவதுபோல…..

ஒரு எரிகல்…
தற்கொலையை நோக்கி
பயணப் படுகிறது !

இரவு….
இனிமையாய் இருக்கிறது !
மேகப்பஞ்சணைகள்….

கனவுகளின்மிச்சங்களாய்…….
தத்தி தத்தி வரும்தென்றல் குழந்தை….
தளிர்களுக்கு
முத்தம் தருகிறது !

விழிப்பறவைகள்
வலிக்க வலிக்க
சிறகு விரிக்கின்றன !

இந்த நிமிடம்…
இந்த செக்கன்….

இதயம்….
ஒரு பனித்துளி போல்
பவித்திரமாய்….பாரமற்றதாய்…..

எங்கோ இரையும்
ஒருவண்டின் ரீங்காரம்…
செவிகளில்
சங்கீதமாய்…..
சங்கீதமாய்…..

தூங்கி விழும்
அந்தஇலை மடியிலிருந்து…
ஒரு`பனித்துளி`
மெல்ல உதிர்கிறது !

இந்த நிமிடம்
நான் வாழ்கிறேன் !!!

விழிகளே !
இந்த வைரப்புதையலை
அள்ளிக்கொள்ளுங்கள் !!

செவிகளே !
இரவின் கீதத்தை
உங்களில்
எழுதிக்கொள்ளுங்கள் !!!

புலன் தூரிகைகளே !
இந்த
அழியாத வர்ணத்தை
உங்கள்இதயங்களில் தீட்டுங்கள் !!!

copyrights©shameela_yoosuf_ali

Tuesday, April 15, 2008

தொடுவானம்



புழுதி படர்ந்த...
வானம்!

சோகம் சுமந்த...
காற்று!!!

வியர்வைப்பூக்களை உதிர்க்கும்....
வெப்பப் பகல்!

தூரத்தில் மங்கலாய்...
தொடு வானம்!

ஒவ்வொரு
எலும்பையும்
துளைத்தெடுக்கும்...
குளிர் இரவு!

விழிகளை
வலிக்கச் செய்யும்...
முடிவிலிப் பாலைவனம்!

இங்கு தான்
என் தாய்...
என்னைச் சுமந்தாள்!

நேற்று
இஸ்ரேலிய விஷமுற்களில்
இதயம் கிழிந்தேன்....
ஒரு
மெலிந்த சிறுவனாய்!

இன்று
ஏவுகணைக்குள் புதைந்த
என்தாய்த் தேசத்தில்
ஒட்டுப் போட்ட
ஆடையோடுமுளைக்கிறேன்....
ஒரு முஜாஹிதாய்.....

சோகக் கரு தரித்திருக்கும்
என் தாய் பூமியே!!
அழாதீர்கள்!!!

வசந்தம் சிலிர்த்த
என் வயதுகளைத்
தொலைத்தேன்!!!

வரண்ட பாலைவனத்திலும்
வற்றாத சுனை நீராய்...
சுகம் தந்த இஸ்லாம்!

இஸ்லாம்
என்காயங்களுக்கு
கட்டுப்போட்டது!

உடைந்த இதயத்துள்
ஒரு பூவாய்
மலர்ந்தது!

அழுத விழியோரத்தில்
ஒருகுளிர்ந்த பனித்துளியாய்
பரிணமித்தது!

என்தாய் பூமியே
அழாதீர்கள்.....

இதோ
ஒரு போராளியின்
சுட்டெரிக்கும்
சுவாசம்சுமந்து பிறக்கிறேன்!!!

ஏ அமெரிக்கா!!!
இதோ வருகிறேன்!!!
உன்
ஒவ்வொரு சுவட்டையும்
எரிப்பேன்...
என்தாய்கள்
அழுதவிழிநீர் கொண்டு!!!!
copyrights Shameela Yoosuf Ali
July 2007

Wednesday, April 2, 2008

யுக முடிவு









லப்.....டப்......
லப்.....டப்......
லப்.....டப்......
உலக உருண்டையின்
இறுதித்துடிப்பு!!!





இந்த நிமிடம்......
இந்த யுகமுடிவு.....
இப்போதைக்கில்லை
எனக் களித்தவனே !



என்ன செய்வாய் இனி?



உயிருக்குள்
வேர் விட்ட
உறவுகள்!



எறும்பூர்ந்து
சேமித்த
சொத்துக்கள்!



இரவெல்லாம்
துணை வந்த
நிலா விளக்கு!



உன் மூச்சை
உள்வாங்கி
தன் மூச்சைத் தந்த
பச்சைமரம் !



வைகறைச்சித்திரம்
தீட்டிய
சூரியத்தூரிகை !



வாசிக்காமல்
மிச்சம் வைத்த
நட்சத்திரப் புத்தகம் !



ஓ.....................
பனித்துளி சிலிர்த்த
இந்த
பூமிச்சிறுகதைக்கு

இனி நிரந்தர
முற்றுப்புள்ளி !



மானிடா !
உன்
கடைசிப் பயணத்துக்கு
கடைசி கடைசியாய்
எதைச்சேமித்தாய் ?

1998 may

Monday, March 31, 2008

சப்பாத்தின் தேய்வு.....




தேவைப்படும் போது
பாதம் சுழித்து’
உள் நுழைக்கவும்….
பதறிக்கழட்டவுமாய்
பார்த்துப் பார்த்து
வாங்கினாய்!

வெதும்பிய பாதங்களின் நாற்றத்தை…
சப்பாத்து
மெளனித்து சகித்தது….

சூரியனே உருகும்
தகிக்கும் தார்வீதி….
சப்பாத்து நடந்தது!

வடதுருவப்பனிப்பாளமாய்
குளிர்ந்த சாலை….
சப்பாத்து நடந்தது!

கைக்குட்டையால்
கவனமாய்
துடைத்ததெல்லாம்
கொஞ்சம் காலம்!

போகப்போக….
சப்பாத்து
தேய்ந்து போனது!!

தேய்ந்தாலென்ன?
புதிதாய் வாங்குவதா சிரமம்
copyrights©shameela_yoosuf_ali








அகதி

சுட்டு விரல்
பட்டுசிலிர்க்கும்…
வேலியோர
மொட்டுமல்லி!

விட்டு விட்டு
பூத்தூவும்…
மேகப்பஞ்சு!
அலுக்காமல்
என்னோடு ஓடி வரும்…
ஒற்றை நிலா!

வாசலுக்கு

வரும் போதெல்லாம்
தலை சிலுப்பிவரவேற்கும்
முன் வாசல்
வேப்ப மரம்!

என்கவிதை பொறுக்கி
கிறுக்குப் பிடித்த
என்னறை
ஜன்னல் கம்பி!

நான்
காதலோடு வந்தமரும்
மருதமரப் பந்தல்பதித்த
நதிக்கரை!

……………………….
ஒன்றும் ரசிக்கவில்லை
………………………..
எல்லாமே
எனக்கு
அந்நியமாய்….

எனக்கெதிராய் சதிசெய்வதாய்
…..…………………….……
…………………………

என் உயிர்
முளைத்து சடைத்த
என் தேசம்
எனக்கினி
சொந்தமில்லை!!!
1998 ஜுலை 14


copyrights©shameela_yoosuf_ali

Sunday, March 30, 2008

சருகு



இலை விட்டு
கிளை
விட்டு
விசாலமான
விருட்சமாய்
நீயின்று.....




விதையாய் சிலிர்க்க
மடியாகி....


தளிராய் துளிர்க்கையில்
தலை தடவி....
உரம் பெற்று ஒங்க
உரமாகி...
.......................

ஓரத்தில்
படபடக்கும்
சருகுக்கும்
இதயமுண்டு...

copyrights©shameela_yoosuf_ali

முடிவிலிப்பாதை!


















என்னவனே!
நீயும் நானும்
சேர்ந்து நடந்த
நதிக்கரையோரம்
உன்
ஞாபகப்பூக்கள்
மெளனமாய் உதிர்கின்றன!





உன்
வாசம் சுமந்த
வாடைக்காற்று..
உயிர் கிள்ளுகிறது!






பாதச்சூட்டில்
பனி உதிர்க்கும்...
டிஸம்பர் மாதப்புல்வெளிகளில்
இன்னும்
ஈரச்சுவடுகள்!!!







































துப்பாக்கிச்சன்னம் தின்ற
உன் உடலை
எரித்தபோதே...
என் எதிர்காலமும்
ஏக்ககனவுகளும்
ஒரேயடியாய் கரிந்து போயின!






கசங்கிய இதயத்தில்...
ஒரு மூலையில்
காதல் மட்டும்
பத்திரமாய்...




என் வீட்டு மல்லிகைப்பந்தல்
எப்போதும் போல...
மொட்டுக்களை
பிரசவிக்கின்றது!



 


..............
கிள்ளும் போது தான்
இதயம்
வலிக்கிறது!





































நிலா காயும் முன்னிரவில்...
முறிந்த வேலிக்கம்புகளூடே
உன் முகம்
பிரகாசமாய்....




எங்கோ தலைகோதும்
தென்றல் காற்றில்..
தென்னங்கீற்றின்
சலசலப்பில்...
உன்
முரட்டுக்குரல்
சங்கீதமாய்...






தூக்கத்தின்
ஆழ்ந்த கர்ப்பத்தில்
உன் கருகிய சடலம்..
திடுக்கிடும் கனவாய்!!
விக்கித்துப்போகிறது
விம்மும் மனசு!!!




என்னவனே!
என் கனவுகளை
காயப்படுத்தாதே!!!




துணை இழந்த
அன்றிலாய்
நானின்னும்
வாழ வேண்டியிருக்கிறது!




யுத்தம் தின்ற
தேசத்தின் எச்சங்களில்...
உன் கனவுகளின்
மிச்சம் தேடி...
களைத்துப்போனேன்!!!




காதலா!!!
என்னையும்
உன்னையும்
ஏங்கிய இலட்சியத்தையும்
எரித்துப்பொசுக்கிய
போர்த்தீக்கு
இன்னுமா தாகம்???




என்றைக்குமாய்
நீ
எரிந்தபோது...
தொடும் தூரத்தில்
என்
இதயமும் எரிந்தது!!!


இது
முடிவிலிப்பாதை!!!


கவிதை முதலிடம்
மாணவ சாகித்திய விழா 2001
உயர்கல்வி மட்டம்
பேராதனைப்பல்கலைக்கழகம்.

copyrights©shameela_yoosuf_ali






Wednesday, March 26, 2008

கனவின் மிச்சம்


நிலவின் கிரணங்கள்….
மெல்லிய வர்ணமாய்
பூமிச்சித்திரத்தில்
வந்து விழுகின்றன !

வெள்ளித்துணுக்குகள்
பதித்த வானம்..
ஏகாந்தமாய் ஒளிர்கிறது !
இதயமே கழன்று விடுவதுபோல…..

ஒரு எரிகல்…
தற்கொலையை நோக்கி
பயணப் படுகிறது !

இரவு….
இனிமையாய் இருக்கிறது !
மேகப்பஞ்சணைகள்….

கனவுகளின்மிச்சங்களாய்…….
தத்தி தத்தி வரும்தென்றல் குழந்தை….
தளிர்களுக்கு
முத்தம் தருகிறது !

விழிப்பறவைகள்
வலிக்க வலிக்க
சிறகு விரிக்கின்றன !

இந்த நிமிடம்…
இந்த செக்கன்….

இதயம்….
ஒரு பனித்துளி போல்
பவித்திரமாய்….பாரமற்றதாய்…..

எங்கோ இரையும்
ஒருவண்டின் ரீங்காரம்…
செவிகளில்
சங்கீதமாய்…..
சங்கீதமாய்…..

தூங்கி விழும்
அந்தஇலை மடியிலிருந்து…
ஒரு`பனித்துளி`
மெல்ல உதிர்கிறது !

இந்த நிமிடம்
நான் வாழ்கிறேன் !!!

விழிகளே !
இந்த வைரப்புதையலை
அள்ளிக்கொள்ளுங்கள் !!

செவிகளே !
இரவின் கீதத்தை
உங்களில்
எழுதிக்கொள்ளுங்கள் !!!

புலன் தூரிகைகளே !
இந்த
அழியாத வர்ணத்தை
உங்கள்இதயங்களில் தீட்டுங்கள் !!!

copyrights©shameela_yoosuf_ali